• May 28 2026

வேலை தேடி சென்ற விஜயாவுக்கு காத்திருந்த ட்விஸ்ட்? அசிங்கப்பட்ட மனோஜ்.. நீத்துவின் சபதம்

Aathira / 12 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், முத்து காரில் இருந்து காணாமல் போன பெண் நேராக மனோஜின் ஷோரூமுக்கு செல்கிறார். அங்கு பொருட்களை ஒவ்வொன்றாக பார்த்து, தனக்கு நான்கு ஃப்ரிட்ஜும் பத்து டிவியும் வேண்டும் என ஆர்டர் போடுகிறார். அதன் பின் ஆப்பிள் ஜூஸ் வேண்டும் என்று கூற, மனோஜ் வாங்கிக் கொடுக்கிறார்.

பின்னர் சாமான்களுக்கு பில் போடச் சொன்னதால் மனோஜ் சந்தோஷத்துடன் பில் போடுகிறார். ஆனால் அந்த நேரம் பார்த்து அவர் வெளியே போய்விடுகிறார். அதன் பின் சந்தோஷும் ஜீவாவும் அவரை தேடிச் செல்கிறார்கள். ஆனால் அவர் சிக்கவில்லை.

அதே நேரத்தில் முத்துவும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மாவும் தேடி வருகின்றனர். அப்போது அவரை கண்டுபிடித்து சமாளித்து மீண்டும் அழைத்துச் சென்று விடுகின்றனர்.

இதைத்தொடர்ந்து மனோஜின் ஷோரூமுக்கு வந்த ரோகினி, விஜயா தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பேசுகிறார். அத்துடன் அங்கு இருந்த கஸ்டமர்கள் முன்பு மனோஜை கண்டபடி திட்டுகிறார். எனினும் மனோஜ், “அம்மாவுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று சமாளிக்கிறார்.


மறுபக்கம் விஜயா வேலை தேடி ஓரிடத்திற்கு செல்கிறார். “இங்கு 50 ஆயிரம் சம்பளம் கொடுப்பாங்களா?” என்று கேட்க, “ஒரு லட்சம் கொடுப்பாங்க” என ஒருவர் சொல்ல, அதனை நம்பிவிடுகிறார் விஜயா. ஆனால் அங்கு தன்னை இண்டர்வியூ எடுக்க மீனா வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். 

மேலும் “இது உங்களுக்கு செட்டாகாது” என்று சொல்ல, “உனக்கு பொறாமை” என்று திட்டுகிறார். ஆனாலும், “இது சங்கத்தின் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக டான்ஸ் சொல்லிக் கொடுப்பது. இங்கு சம்பளம் கிடையாது, டீ பிஸ்கட் தான்” என கூற, விஜயா அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

இன்னொரு பக்கம், ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு நீத்து முகத்தை மூடிக்கொண்டு செல்கிறார். அங்கு “ரவி என்கிட்ட வர மாட்டேங்குற. என்னை ரொம்ப அசிங்கப்படுத்திட்ட. உன் ரெஸ்டாரண்டை க்ளோஸ் பண்ணாமல் விடமாட்டேன். உன்கிட்ட ரவியையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று மனதுக்குள் பேசிக்கொண்டு இருக்கிறார்.

அந்த நேரத்தில் ரவி அங்கு வந்து ஸ்ருதிக்கு அன்புடன் உணவு ஊட்டுவதை பார்த்து இன்னும் பொறாமைப்படுகிறார். இதுதான் இன்றைய தினம் வெளியான எபிசோட்.

Advertisement

Advertisement