இந்திய சினிமாவை உலக அளவில் உயர்த்திய பிரம்மாண்ட திரைப்படம் தான் பாகுபலி. இந்த படத்தை ராஜமௌலி இயக்கினார். இதன் இரு பாகங்களும் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மாபெரும் வெற்றியை பெற்றது.
தற்போது இந்த இரண்டு படங்களையும் இணைத்து புதிதாக மறு அமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள 'பாகுபலி தி எபிக்' படம் அக்டோபர் 31-ம் தேதி உலக அளவில் மீண்டும் ரிலீசாக உள்ளது.
இந்த மறுவெளியீட்டை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் பார்ப்பதற்காக காத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் படம் வெளியாவதற்கு முன் அட்வான்ஸ் புக்கிங் டிக்கெட் விற்பனை மட்டுமே சாதனை படைத்துள்ளதாம்.
முன்பதிவில் மட்டும் ஒரு கோடி ரூபாயை தாண்டி உள்ளதாக கூறப்படுகின்றது. இதுவரை தெலுங்கு சினிமா வரலாற்றில் மறு வெளியீட்டில் சாதித்திருக்கும் படங்கள் இரண்டு மட்டுமே என்று கூறப்படுகின்றது.
முதல் நாள் பிரீமியர் சோக்களுக்கு மட்டும் 5072 டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளது. இது பல பிரபலமான மறுவெளியீட்டு படங்களின் மொத்த வசூலையும் முந்தி உள்ளது.
இப்படம் சுமார் 8.3 கோடி ரூபாய் வசூலை அமெரிக்காவில் தொடக்க நாளிலேயே எட்டக்கூடும் என வணிக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பாகுபலி ஒரு புதிய சினிமா அனுபவமாக மாறி உள்ளது. மேலும் இந்த படம் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது சினிமா வரலாற்றை மாற்றிய காவியமாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!