• Apr 17 2026

பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு முதல் வாழ்த்து கூறிய ஆட்டநாயகன்! இந்த வெற்றி யாருக்கு சொந்தம்? அர்ச்சனாக்கா? பிரதீப்க்கா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான கிராண்ட் பைனல் இன்றைய தினம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், டைட்டில் வின்னர் அர்ச்சனா என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. 

அதன்படி, நேற்றைய தினம் வெளியான தகவல் படி அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் எனவும், மணி ரன்னர் அப் எனவும் மூன்றாவது இடத்தை மாயா பெற்றதாகவும் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப் அந்தோணி முதல் நபராக டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


அதில், அர்ச்சனா டைட்டில் வின்னர் என்ற செய்தி உண்மையாக தான் இருக்கும் எனக் கூறி, 'நல்லா இரு' என்று தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

தற்போது பிக் பாஸ் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வந்த அர்ச்சனாவுக்கு, பிரதீப் ரெட் கார்ட் விவகாரத்தின் பின்னரே அதிக சப்போர்ட் கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement