• Jun 27 2025

திரையின் திலகம்.. நம்பிக்கை நாயகி..! 39வது பிறந்தநாளைக் கொண்டாடும் பிரபல நடிகை..!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் மலையாள திரையுலகத்தில் தன்னிகரற்ற முத்திரையை பதித்தவர் நடிகை பாவனா. இன்று (ஜூன் 6, 2025) தனது 39வது பிறந்த நாளைக் கொண்டாடும் இவர், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரிடமிருந்தும் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் #HappyBirthdayBhavana என்ற ஹாஷ்டாக் டிரெண்டாகி வருகின்றது.


பாவனா, 1986ம் ஆண்டு ஜூன் 6ம் திகதி கேரளா மாநிலத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே நடிகையாகும் ஆசையுடன் வளர்ந்த பாவனா, 2002-ம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான "நம்மல்" மூலம் திரையுலகில் கால்பதித்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றதுடன், பாவனாவுக்கு மலையாள திரையுலகத்தில் சிறப்பான வரவேற்புக் கிடைத்தது.


பின்னர் பாவனா தனது திறமையை தமிழ் சினிமாவிலும் பரவலாக வெளிப்படுத்தத் தொடங்கினார். பாவனா தமிழ் மற்றும் மலையாளம் மட்டுமல்லாமல், கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்புத் திறமையின் மூலம், பாவனா பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருந்தார். 

குறிப்பாக மலையாள சினிமாவுக்கான Kerala State Special Jury Award, உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருந்தார். அத்தகைய நடிகை பாவனாவின் பிறந்த நாளையொட்டி, சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் ஆகியோர் சமூக ஊடகங்களில் அவருக்காக வாழ்த்து செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement