• Apr 17 2026

விவாகரத்து முடியல.. அதுக்குள்ள அடுத்த பொண்ணா? சரவணனை வெளுத்து வாங்கிய பாண்டியன்

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாண்டியன் சரவணனைப் பார்த்து நீ கோவிலில ஒரு பொண்ணு கூட கதைச்சுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன் என்கிறார். மேலும், நீ வளர்ந்த பிள்ள யாருகூட பழகணும் என்று நான் சொல்ல கூடாது உனக்கே தெரிய வேணும் என்கிறார் பாண்டியன். அதனை அடுத்து இப்பதான் விவாகரத்து பிரச்சனை போய்க்கொண்டிருக்கு அதுக்குள்ள நீ அடுத்த பொண்ணோட கதைக்கிறது எந்த விதத்தில நியாயம் என்று கேட்கிறார் பாண்டியன்.

அதைக் கேட்ட சரவணன் எனக்கு எந்தப் பொண்ணு கூடயும் தொடர்பு இல்ல என்று சொல்லுறார். அத்தோட நீங்க கோவிலில பார்த்த பொண்ணு என்கூட படிச்ச பொண்ணு அவ்வளவு தான் என்கிறார். பின் பாண்டியன் நீ படிக்கிறப்ப ஒரு பொண்ணை விரும்புறேன் என்று சொன்ன அந்தப் பொண்ணு தான் இந்தப் பொண்ணா என்று கேட்கிறார். 


அதுக்கு சரவணனும் ஆமா, என்று சொல்லி நான் வேணும் என்று ஒன்னும் பேசல எதார்த்தமா கோவிலில பார்த்து பேசினோம் அவ்வளவு தான் என்கிறார். மறுபக்கம் செந்தில் கையில கமிஷன் மூலம் வாங்கின பணத்தை வச்சிருந்ததைப் பார்த்த மீனா உங்களுக்கு ஏது இவ்வளவு பணம் என்று கேட்கிறார். அதுக்கு செந்தில் சம்பள பணம் என்கிறார். அதைக் கேட்ட மீனா இது சம்பள பணம் இல்ல என்று எனக்குத் தெரியும் என்கிறார்.

பின் செந்தில் சமாளிக்கிறார். அதைத் தொடர்ந்து ராஜி டயட் சாப்பாடு சாப்பிடுறதைப் பார்த்த காந்திமதி எதுக்கு இந்த திடீர் முடிவு என்று கேட்கிறார். அதுக்கு ராஜி என்னை ஒருத்தன் கிண்டல் பண்ணிட்டான் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement