• Apr 17 2026

லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.!

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தொழிலதிபராக இருந்து நடிகராக மாறி கவனம் பெற்றவர் லெஜண்ட் சரவணன். அவரது அடுத்த படைப்பாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் 'லீடர்'. இந்தப் படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவை எஸ். வெங்கடேஷ் மேற்கொண்டிருக்கிறார். அதேபோல், படத்தொகுப்பை பிரதீப் கவனித்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாகவும் படம் தரமானதாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

'லீடர்' திரைப்படம் உலகளவில் ஏப்ரல் 03-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வெளியீட்டில் மாற்றம் இருக்கலாம் என்ற பேச்சுகள் எழுந்தபோதிலும், தற்போது படம் திட்டமிட்டபடி அதே தேதியில் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி மார்ச் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக வெளியான டைட்டில் டீசர் மற்றும் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, லெஜண்ட் சரவணனின் ஸ்டைல், ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.


Advertisement

Advertisement