• May 16 2026

பொங்கல் ஸ்பெஷல் கங்குவா படத்தின் Second லுக் போஸ்டர் ரிலீஸ்... வைரலாகும் சூர்யா டுவிட் பதிவு..

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் "கங்குவா". இந்த திரைப்படத்தின் Second லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. 


சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வரலாற்று கதையம்சத்தையும் இப்படத்தில் உள்ளடக்கியுள்ளனர்.


ஏற்கனவே இப்படத்தில் இருந்து கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் First லுக் போஸ்டர் வெளிவந்த நிலையில், இன்று பொங்கல் ஸ்பெஷல் ஆக கங்குவா படத்தின் Second லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.


இந்த போஸ்டரில் இரண்டு கெட்டப்பில் மிரட்டலான லுக்கில் இருக்கிறார் நடிகர் சூர்யா. அந்த போஸ்டரை தனது டுவிட்டரில் ஷேர் செய்த அவர் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இதோ அந்த போஸ்டர்..


Advertisement

Advertisement