• May 28 2026

ஜெயிலுக்கு போக தயாரான ஸ்ருதி!முத்துவை உடைத்த ஒரு போன் கால்? விஜயா குடும்பத்தில் பேரிடி

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், ரவியின் ரெஸ்டாரண்டுக்கு வந்த நீத்து அங்கு ஒரு பையை வைத்து விட்டு செல்கிறார். அவர் சென்றதும் போலீசார் அங்கே வருகின்றனர். அந்த பையை சோதனை செய்து பார்க்கும்போது, அதில் சட்டவிரோதமான மது பாட்டில்கள் இருப்பது தெரிய வருகிறது.

இதையடுத்து, இதனை சட்டவிரோதமாக விற்பனை செய்கிறீர்களா என ஸ்ருதி மற்றும் ரவியிடம் போலீசார் கேள்வி கேட்டு, அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு அழைக்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் ஸ்ருதி யோசித்து பார்க்கும்போது, இதை நீத்துதான் செய்திருக்கிறார் என உறுதியாக நம்புகிறார்.

அதன்படி சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்க்கும்போது, அதில் நீத்து செய்த காரியம் உறுதியாகி விடுகிறது.

இதனால் அங்கிருந்து கிளம்பி சென்ற போலீசார், நீத்துவிடம் சென்று சிசிடிவி காட்சிகளை காட்டுகின்றனர். “அவர்கள் புகார் கொடுத்தால் நீங்கள்தான் உள்ளே போக வேண்டும். இனிமேல் இப்படி செய்ய வேண்டாம்” என எச்சரித்து செல்கின்றனர்.


அதற்கு பின்பு ஸ்ருதியும் வந்து, “என்னுடன் மோத வேண்டுமென்றால் நேராக மோது” என திட்டிவிட்டு செல்கிறார்.

இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த விஜயா, வேலை தேடி சென்ற இடத்தில் நடந்ததை சொல்லி புலம்புகிறார். அங்கு மீனாதான் இன்டர்வியூ எடுத்தார் என்று சொன்னதும், “அப்படியா? மீனா முதன்முறையாக விஜயாவையே கேள்வி கேட்டாரா?” என அனைவரும் விழுந்து சிரிக்கின்றனர்.

ஆனால் அந்த நேரத்தில் வக்கீல் கால் செய்து, வீட்டை ஏலத்தில் விடப் போகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை கூறுகிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் முத்து தவிக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement