• May 15 2026

ஞானத்துக்கு பளார் என்று அறைந்த ரேணுகா.. எஸ்கேப்பாகி ஓடிய கரிகாலன்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ஞானம் தொடங்கி இருக்கும் கருவாடு பிசினஸ் இருக்கும் இடத்திற்கு போலீசார் வருகின்றார்கள். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாக நிற்க, கரிகாலன் எஸ்கேப் ஆகி ஓடுகிறார்.

எதுவும் புரியாமல் அனைவரும் நிற்க, இங்கு கொண்டு வந்த அத்தனையும் திருட்டு சரக்கு அந்த கரிகாலன் ஒரு பிராடு என போலீசார் சொல்ல, அனைவரும் ஷாக் ஆகின்றார்கள்.

இதை தொடர்ந்து ஞானம் அவனை பிடிக்க முயற்சி செய்ய, கரிகாலனும் அவனது கூட்டாளியும் தலைகால் புரியாமல் தப்பித்து ஓடுகிறார்கள்.


இதை பார்த்த குணசேகரன் விசாலாட்சி அம்மாவுக்கு போன் பண்ணி, உன்னோட மகன்கள் இன்றைக்கு வீடு திரும்பல என்றா  போலீஸ் புடிச்சுட்டு போயிட்டு என்று நினைச்சி கொள்ளு என்று  சொல்ல, அவர் பதட்டம் அடைகிறார்

இறுதியாக ஞானம் தன் தம்பிகளிடம் நான் எங்கேயாவது போய் விடுவேன் என்று அழுது கொண்டே கிளம்ப, ரேணுகா அவரின் கையை பிடித்து பளார் என அறைகிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement