• Apr 15 2026

அனுதாபத்திற்காக படக்குழுவே செய்த வேலையா? 'ஜனநாயகன்' லீக் விவகாரத்தில் பி.டி செல்வக்குமார்

shali / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த சில நாட்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் ஜனவரி மாதம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. 

ஆனால் சென்சார் தொடர்பான பிரச்சனைகளால் அதன் வெளியீடு தாமதமானது. இப்படியான சூழலில், சமீபத்தில் முழு படம் இணையத்தில் வெளியாகியமை, படக்குழுவிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் பி.டி செல்வக்குமார் கன்னியாகுமரியில் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவர் கூறியதாவது, “படக்குழுவே திட்டமிட்டு இப்படத்தை வெளியிட்டது போல வெளியிட்டு, அதன்மூலம் ஒரு அனுதாபத்தை உருவாக்க முயன்றிருக்கலாம்” என்றார். இந்த கருத்து ரசிகர்களிடையே பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஒருபுறம், இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் படக்குழுவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். மற்றொரு புறம், இது வெறும் ஊகமே தவிர உறுதியான ஆதாரம் இல்லை என்றும் பலர் கூறுகின்றனர். மொத்தத்தில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை சுற்றியுள்ள இந்த சர்ச்சைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


Advertisement

Advertisement