சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, விஜயா யோகாசனம் செய்யுறதுக்கு நோட்டீஸ் அடிச்சு ஆட்களை சேர்க்கலாம் என்று சொல்லுறார். அதுக்கு சிந்தாமணியும் அப்புடியே செய்திடலாம் என்கிறார். இதனை அடுத்து முத்துவோட friend முத்துவப் பார்த்து உன்ட மச்சான் சத்தியாவ வெளிநாட்டுக்கு அனுப்பலாம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட முத்து ஏன் அவன் எங்கயோ போய் சும்மா கஷ்டப்படணும் என்கிறார்.
பின் மீனா முத்துவப் பார்த்து மனோஜ் கடையில சீட்டுக் கட்டி ரெண்டு பேர் ஏமாந்துட்டாங்க என்று சொல்லுறார். மேலும் கடையில போய் இவங்க பணத்தை கேட்க கொடுக்க முடியாது என்று சொல்லியிருக்காங்க என்கிறார். அதைக் கேட்ட முத்து கோபப்படுறார். பின் மீனா முத்துவப் போய் மனோஜ் கிட்ட பேசச் சொல்லுறார்.
இதனை அடுத்து விஜயா ஜீன்ஸும் ஷேர்ட்டும் போட்டுக் கொண்டு நிக்கிறதைப் பார்த்த அண்ணாமலை இது என்ன புது கெட்டப் என்று கேட்கிறார். பின் ஸ்ருதி விஜயாவப் பார்த்து சூப்பரா இருக்கீங்க என்று சொல்லுறார். அதனைத் தொடர்ந்து விஜயா ஸ்ருதியைப் பார்த்து என்ன ஒரு போட்டோ எடுத்துவிடு என்கிறார். அப்புடியே கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து மீனா ரோகிணி கிட்ட போய் அவங்க கட்டின பணத்தை கொடுக்கச் சொல்லுறார். அதுக்கு மனோஜ் பணம் எல்லாம் கொடுக்க முடியாது என்கிறார். பின் முத்து கோபமா கதைச்சவுடனே மனோஜ் பணத்தைக் கொடுத்திடலாம் என்று சொல்லுறார். அதனை அடுத்து மனோஜ் லோக்கரில இருக்கிற பணத்தை எடுக்கலாம் என்று போய் பார்க்கும் போது அங்க எந்தப் பணமும் இல்ல என்று மனோஜ் கத்துறார். பின் முத்து cc tv-ல பார்க்கச் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!