தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் நடிகரான அஜித், நடிக்கும் AK 64 படத்தின் ஒரு புதுமையான தகவல் தற்போது சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது. ‘சிங்கம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்த டேனி (Danny Sapani) தற்போது AK 64-ல் மீண்டும் முக்கிய வில்லனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கும் AK 64, இப்போது இந்த புதிய தகவலால் இன்னும் அதிகளவான ஹைப்பை அடைந்துள்ளது.
‘சிங்கம்’ படத்தில் சூர்யாவின் தூள் கிளப்பும் நடிப்பும், டேனியின் வில்லத்தனமும் பார்வையாளர்களை அச்சுறுத்தியதுடன் திருப்தியையும் அளித்திருந்தது. தற்போது அதே வில்லன் அஜித்துடன் இணைந்து ஒரே திரையில் மோதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பற்றி தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்றாலும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் படக்குழுவினரால் டேனியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பல தகவல்கள் கூறுகின்றன.
Listen News!