2018 ஆம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் தான் கீதா கோவிந்தம். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து இருந்தனர். இந்த படத்தில் அவர்களுடைய லவ் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. அதன் பின்பு இந்த ஜோடியை ரசிகர்களும் வரவேற்று மகிழ்ந்தனர்.
இதைத்தொடர்ந்து டியர் காம்ரேட் என்ற படத்தில் மீண்டும் ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து நடித்திருந்தனர். அதன்பின் அவர்களைப் பற்றிய கிசுகிசு தகவல்கள் இணையதள பக்கங்களில் வேகமாக பரவின. விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவுடன் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் தெரிவித்தார்.
கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தனக்கென தக்க வைத்துள்ளார். ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசு தகவல்கள் வெளியான நிலையில் அதை நிரூபிக்கும் வகையிலேயே அவர்கள் இருவரும் அவுட்டிங், டேட்டிங் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். நேற்று இரவு பகிரப்பட்ட போஸ்டில் கீதா கோவிந்தம் படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
மேலும் இந்த படம் எப்போதும் தனக்கு ஸ்பெஷலான படம் என்று குறிப்பிட்டு ஒருசில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். குறித்த போட்டோஸ் தற்போது இணையத்தள பக்கத்தில் வைரலாகி வருவதோடு இவர்களுடைய கெமிஸ்ட்ரியை பார்த்த ரசிகர்களும் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!