• Sep 12 2025

‘தே கால் ஹிம் ஓ.ஜி’ டிரெய்லர் எப்போது? வெளியீட்டு தேதி அறிவித்த படக்குழு...!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் அடுத்த பெரிய படம் ‘தே கால் ஹிம் ஓ.ஜி’. இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் சுஜித், இவர் இதற்கு முன் ‘ரன் ராஜா ரன்’, ‘சாகோ’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். பவன் கல்யாணுடன் பிரியங்கா மோகன் மற்றும் எம்ரான் ஹாஷ்மி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஒரு முக்கியமான மிஷனுக்காக மும்பைக்கு வருகிறார். அதைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது.

பிரியங்கா மோகன், இந்தப் படத்தில் ‘கண்மணி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் இவரது கதாபாத்திர அறிமுக போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. படத்தின் டிரெய்லர் பற்றி தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தே கால் ஹிம் ஓ.ஜி’ திரைப்படத்தின் டிரெய்லர் செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இந்தப் பாணியில் உருவாகும் படத்திற்கு இசையமைக்கிறார் தமன் எஸ். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். படம் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Advertisement

Advertisement