தமிழ் திரையுலகில் இன்று வெளியாகி பரவலான கவனத்தை பெற்றுள்ள படம் தான் ‘ஜென்ம நட்சத்திரம்’. இந்தப் படத்தில் நடிகர் தமன் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் மல்வி மல்ஹோத்ரா, காளி வெங்கட், தலைவாசல் விஜய் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
பதட்டமும், திகிலும், மன அழுத்தமும் கலந்து சொல்லப்பட்ட ஒரு புதிய முயற்சியாக இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் அதிர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் திருப்பங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளன.
‘ஜென்ம நட்சத்திரம்’ ஒரு மனதளவியல் திகில் திரைப்படமாக அமைந்துள்ளது. இதில் கதாநாயகி கர்ப்பமாக இருப்பாள். ஆனால் தொடர்ந்து கனவுகளில், அமானுஷ்யமான காட்சிகள் நிகழும். அதே சமயத்தில், கதாநாயகன் ஒரு சினிமா இயக்குநராக உயரவேண்டும், தன்னுடைய முதல் படத்தை முழுமையான படைப்பாக உருவாக்கவேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கிறான்.
இவ்வாறு இரு நிலைகளில் நடைபெறும் கதையை, இயக்குநர் மணிவர்மன் மிகவும் வித்தியாசமான treatment-ல் காட்சிப்படுத்தியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “தமன் குமார் நடிப்பு ரொம்ப மெச்சத்தக்கது. கற்பனை, உண்மை, பயம் எல்லாமே அவங்க முகத்தில் தெரியுது..!”
‘ஜென்ம நட்சத்திரம்’ படம் பார்க்கும் பொழுது, திரையில் நடக்கும் சம்பவங்கள் உண்மையானதா.? அல்லது கனவா.? என்ற சந்தேகத்தில் பார்வையாளர் சென்றுள்ளார்கள். இந்த சைக்கலாஜிக்கல் த்ரில்லர் முறை படம் ரசிகர்களை சூப்பராக கவர்ந்துள்ளது. படம் வெளியானது முதல் சிறந்த விமர்சனத்தையே பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!