• Sep 13 2025

அமீர்கானுக்கு "கூலி" படத்தில் நடித்தது மனமுடைவா.? வைரலாகும் வதந்திகளுக்கு பதில் இதோ..!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் முத்திரை பதித்த நடிகரும், பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்தவருமான அமீர்கான், தற்போது இணையத்தில் பரவியுள்ள ஒரு புதிய புரளி காரணமாக மீண்டும் ஒரு முறை ரசிகர்களிடையே பேசப்படுகிறார்.


பிரபல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. இதில், அமீர்கான் சிறிய கதாபாத்திரத்தில் (cameo) நடித்த நிலையில், அதனைத் தொடர்ந்து சில தகவல்கள் மற்றும் தவறான புரளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.


அது என்னவென்றால், “கூலி படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என்னவென்று தெரியாமலே நடித்துவிட்டேன். அந்த படத்தில் நடித்தது என் தவறு. இனி இப்படிப்பட்ட படங்களில் நடிக்க மாட்டேன்” என்று அமீர்கான் கூறியதாக வதந்திகள் பரவுகின்றன. இவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement

Advertisement