தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. இன்றைய தலைமுறை பெண்களுக்கான சாதனைச் சிற்பி என்றழைக்கப்படும் இவர், சமீபத்தில் தன்னுடைய வாழ்க்கை, எதிர்பார்ப்புகள், மற்றும் மனநிலைகள் பற்றிய ஓர் உணர்வுபூர்வமான நிலையை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் சமந்தா, "தாய்மை என்பது வரம். அந்த அழகான அனுபவத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்." என்று கூறியிருந்தார். இந்த வார்த்தை ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், திரையுலகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய சமீபத்திய வாழ்க்கைப் பயணத்தை பற்றி மிக நேர்மையாகப் பேசிய சமந்தா, தாய்மை பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு இவ்வாறு பதிலளித்திருப்பது தற்பொழுது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது வரை பல சவால்களை எதிர்கொண்டு முன்னேறிய அவர், தற்போது தாய்மையை எதிர்நோக்கியிருப்பதாக கூறுவது, அவரது வாழ்க்கையின் அடுத்த படியாக இருக்கும் என ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.
அத்துடன் சமந்தா கடந்த சில வாரங்களாகவே பிரபல வெப் தொடர் இயக்குநர் ராஜ்நிதிமோருவுடன் நெருக்கமாக இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், “தாய்மை” பற்றி சமந்தா பேசியமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Listen News!