'ஏங்க..' என்ற வார்த்தையை கேட்டாலே பலரது நினைவுக்கு வருபவர் கூமாபட்டி தங்கப்பாண்டி தான். தேனிக்கு அருகில் உள்ள கூமாபட்டி பற்றி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு பிரபலமானவர்தான் தங்கப்பாண்டி ஜீவானந்தம்.
கூமாபட்டி பற்றி இவர் பேசிய 'ஏங்க.. இந்தப் பக்கம் பார்த்தா அந்தமான் காடு... அந்தப் பக்கம் காஷ்மீர்..; என்ற வசனம் பெரிதளவில் வைரலானது. அதன் பின்பு இதை பார்த்த பலர் அந்த கூமாபட்டியில் என்னதான் இருக்கின்றது என டூர் வர ஆரம்பித்துள்ளனர். அங்கு வந்த பிறகு தான் அந்த இடத்திற்கு அடிப்படை கழிவறை வசதி கூட இல்லை என்று பலருக்கு தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து சிங்கிள் பசங்க சோவில் கலந்துகொண்ட தங்கப்பாண்டி - சந்தினி ஜோடி பெரிதளவில் பிரபலம் ஆனார்கள். அதில் இவர்களுடைய கெமிஸ்ட்ரியும் நன்றாக ஒர்க் அவுட் ஆனது. ஒரு தடவை சிங்கிள் பசங்க ஷோவில் வைத்து நான் உன்ன கூமாபட்டிக்கு கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிக்கின்றேன் என்று தங்கபாண்டி சொன்னது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், தற்போது கூமாபட்டி தங்கபாண்டி - சந்தினி இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் சந்தினியை பார்த்து 'ஏங்க.. இது தங்க விளக்குங்க.. என்று சொன்னதோடு மட்டும் இல்லாமல் சந்திரனை தொட்டது யார்? என்ற பாடலை பாடி இந்த குத்து விளக்கை தொட்டது நான் தாங்க என்று கூறுகின்றார்.
அதற்கு சந்தினி செருப்பு பிஞ்சிடும் என்று சொல்லுகின்றார். தற்போது இவர்களுடைய ரிலீஸ் வைரல் ஆகி வருகின்றது. இதை பார்த்த பலரும் அடுத்த பஞ்சாயத்து கூமாபட்டிக்கு தான் என தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!