இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா ரூத் பிரபு, தற்போது மீண்டும் ஒரு மாறுபட்ட கோணத்தில் ஊடகங்களில் இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் அவர் நடித்த "Citadel: Honey Bunny" என்ற ஹாலிவுட் வெப் தொடர், நல்ல வரவேற்பைப் பெற்றது. இது இவரது சர்வதேச முயற்சிகளில் ஒன்றாகும்.
இந்நிலையில், சமந்தா தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விருப்பத் தேர்வுகள் குறித்து நெஞ்சை நெகிழவைக்கின்ற வகையில் கூறியுள்ளார்.
சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, சமந்தா தனது வாழ்க்கை, மனநிலைகள், மற்றும் சினிமா குறித்த தனது சிந்தனையைப் பகிர்ந்துள்ளார்.
அதன்போது, "நடிகை வாழ்க்கை நீண்டது அல்ல. புகழ், ரசிகர்கள், பட்டாளங்கள் எல்லாம் ஒரு கட்டத்திற்கு பிறகு ஓய்கின்றன. ஒரு நடிகையாக இருப்பதை விட, வாழ்க்கையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதே என் நோக்கம். அந்த உணர்வை உணர்ந்தது எனக்குள் மிக முக்கியமான திருப்பமாக இருந்தது." என்று கூறியிருந்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!