• Sep 13 2025

விஜயாவின் செயலை நினைத்து வேதனைப்படும் முத்து..! உண்மையை அறியும் மீனா...

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனா முத்துவைப் பார்த்து இந்த வீட்டுக்கு நான் வந்ததில இருந்து அத்தை உங்க கூட பாசமா நடந்து கொண்டதே இல்ல என்ன காரணம் என்று கேட்கிறார். மேலும் அப்புடி என்னதான் உங்க சின்ன வயசில நடந்தது என்று கேட்கிறார். 


அதுக்கு முத்து நடந்ததெல்லாத்தையும் சொல்லுறார். அதில் யோசியர் ஒராள் விஜயா கிட்ட முத்துவால வீட்டில இருக்கிற யாருக்காவது ஆபத்து என்று சொல்லுறார். அதைக் கேட்ட விஜயா என் மேல முத்து தான் உயிரா இருப்பான் என்கிறார். 

இதனை அடுத்து யோசிகர் 6வருஷம் முத்துவ வீட்டில இருந்து பிரிச்சு வைச்சிருக்க சொல்லுறார். பின் விஜயா வீட்ட வந்து அண்ணாமலை கிட்ட யோசிகர் இப்புடி சொல்லுறார் எனக்கு பயமா இருக்கு என்கிறார். அதைக் கேட்ட அண்ணமாலை இதை எல்லாம் நம்பாத என்று சொல்லுறார்.


அதனை அடுத்து முத்துவ அண்ணாமலை அம்மா வீட்ட விடுவம் என்று முடிவெடுக்கிறார்கள். பின் முத்துவ பாட்டியோட விட்டுட்டு விஜயாவும் அண்ணாமலையும் போகிறார்கள். அப்ப முத்து அழுதுகொண்டிருக்கிறார். அதையெல்லாம் முத்து மீனாவுக்கு சொல்லி அழுகிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement