நடிகை போட்ட பாலியல் புகார் வழக்கை ரத்து செய்ய கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் பி.வி. நாகரத்தினா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு வழக்கை மீண்டும் விசாரித்தது.
விசாரணையின் போது, பேச்சுவார்த்தை மூலம் வழக்கை முடிக்க முன்பு வழங்கப்பட்ட உத்தரவை இருதரப்பும் ஏற்க முடியாது என தெரிவித்தனர். இருப்பினும், இருவரும் சம்மதத்துடன் உறவில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், நீதிமன்றம் இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற வேண்டும் என்றும், குறிப்பாக ஆணாக உள்ள சீமான், நடிகையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
மேலும், நடிகையை எதிர்காலத்தில் தொந்தரவு செய்ய மாட்டேன் என உறுதியளிக்கும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்போதுதான் வழக்கை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இந்த வழக்கு வரும் செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்நாளில் சீமான் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து, மன்னிப்புக் கோரும் நடவடிக்கையை எடுத்தால், வழக்கை முடிக்க நீதிமன்றம் தயாராக உள்ளது.
Listen News!