பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிர் ராஜியைப் பார்த்து கிளாஸ் எல்லாம் உனக்கு எப்புடி போகுது என்று கேட்கிறார். அதுக்கு ராஜி சலிப்போட ம்ம்... போகுது என்கிறார். அதைக் கேட்ட கதிர் நீ படிக்க போன மாதிரியே தெரியலயே என்கிறார். பின் ராஜி நீ வேற பணத்தைக் கட்டிட்ட அதுக்காகவே பாஸ் பண்ணி ஆகணும் என்கிறார். அதைக் கேட்ட கதிர் கோபத்தோட நான் காசு கட்டினான் என்றதுக்காக ஒன்னும் நீ படிக்க தேவையில்ல என்று சொல்லுறார்.

மேலும், உனக்கு விருப்பம் இருந்தால் மட்டும் படி என்கிறார். அதுக்கு ராஜி முன்னாடி எல்லாம் எனக்கு சீரியஸ்ஸா படிக்கணும் என்றே தோணல என்கிறார். அதனை அடுத்து கதிர் நீ கனவு கண்டவிஷயம் கொஞ்ச நாளில நடக்கப்போகுது என்ற சந்தோசம் உன்ட முகத்தில கொஞ்சம் கூட இல்ல என்று சொல்லுறார். பின் ராஜி நான் வீட்டுக்குப் போறேன் என்று சொல்லிட்டு கதிர் மேல கோபத்தோட கிளம்புறார்.
அதனை அடுத்து வீட்டுக்குப் போன கதிர் நீ என்ன எதையோ பறி கொடுத்த ஆட்கள் மாதிரி இருக்கிற என்று கேட்கிறார். அதுக்கு ராஜி நீ கோபப்பட்டு பேசினால் அப்படி தான் இருப்பன் என்கிறார். மறுநாள் காலையில ராஜி தனியா போய் ட்ரெய்னிங் ஸ்டார்ட் பண்ணி ஓடுறார். பின் அதே இடத்திற்கு கதிரும் போய் நிற்கிறார்.
அதனை அடுத்து கதிர் ராஜியைப் பார்த்து எப்பவுமே ரெண்டு பேரும் சேர்ந்து தானே வருவம் என்று சொல்ல, ராஜி அதுக்கு இல்ல இண்டைக்கு தனியா வரணும் என்று தோணிச்சு என்கிறார். அதுக்கு கதிர் என்மேல ஏதும் கோபமா என்று கேட்கிறார். ராஜி அப்படி ஒன்னும் இல்ல என்கிறார். மறுபக்கம் மயில், மீனாவைப் பார்த்து சரவணனை ஒரு பொண்ணு கூட பார்த்தேன் என்று சொல்லுறார். அதுக்கு மீனா அது யாராவது தெரிஞ்ச ஆட்களா இருக்கும் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!