• Apr 16 2026

ராப் இசையுடன் களமிறங்கிய கரிஷ் கல்யாண்.. வெளியானது “தாஷமக்கான்” படத்தின் முதலாவது பாடல்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புதிய இசை கலையின் பரிமாணத்தை கொண்டு வரும் படமாக உருவாகி வரும் “தாஷமக்கான்”, தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னையின் பின்னணியில் ராப் இசைக்கலையை மையமாக்கி உருவாகும் இப்படத்தில், கரிஷ் கல்யாண் ராப் இசைக் கலைஞராக நடித்துள்ளார்.


இந்த திரைப்படத்தை லிஃப்ட் படத்தை இயக்கிய இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்குகிறார். தயாரிப்பில் IDAA Productions மற்றும் Think Studios இணைந்து பணியாற்றியுள்ளனர்.

“தாஷமக்கான்” திரைப்படம், ராப் இசையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஹரீஷ் கல்யாண், ராப் கலைஞராக நடித்து, கதையின் மையப்புள்ளியாக திகழ்கிறார். இந்த புதிய முயற்சி, தமிழ் ரசிகர்களுக்கு  இசை அனுபவத்தை தரவிருக்கின்றது. 

இந்நிலையில், இப்படத்தின் முதலாவது பாடலான “ராப் பார்ட்டில்”, சமீபத்தில் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் பாடல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சில நிமிடங்களுக்குள் வைரல் ஆகி, லட்சக்கணக்கான பார்வைகளை குவித்துள்ளது.

Advertisement

Advertisement