• Apr 16 2026

பலோவர்ஸ் இல்லேன்னா வாய்ப்பே இல்லையா? இரவெல்லாம் தூக்கம் இல்ல.! ஷிவா ஷா ராஜ் வேதனை

shali / 1 month ago

Advertisement

Listen News!

சமீப காலமாக சினிமா துறையில் சமூக வலைத்தள தாக்கம் மிகப்பெரிய அளவில் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற தளங்களில் உள்ள பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை, நடிகர்-நடிகைகளின் மார்க்கெட் மதிப்பை தீர்மானிக்கிறது என்ற பேச்சு பரவலாக உள்ளது. இந்த சூழலில், பேட்டி ஒன்றில் ஷிவா ஷா ராஜ் கூறிய நேர்மையான கருத்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


சில தமிழ் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஷிவா ஷா ராஜ், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர். பெரிய ஹீரோக்களுடன் இணைந்து சிறிய ஆனால் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், பேட்டியில் கலந்த இவர், " இப்போ சினிமாவில இன்ஸ்டாகிராம்ல எவ்வளவு பலோவர்ஸ் இருக்காங்கன்னு பார்த்துத் தான் சம்பளமே பேசுறாங்க. ஆனா, பலோவர்ஸை வரவைக்க என்கிட்ட தகுதி இல்லையே.!மூஞ்சிலயும் நெஞ்சிலயும் முடி இருக்கு. என்னால தொப்புள் தெரியும் படி ரீல்ஸ் பண்ண முடியாது. என்ன பண்ணால் பலோவர்ஸை ஏத்துறதுன்னு தெரியாம, நைட் முழுக்க தூக்கம் வராமல் சுத்திகிட்டு இருக்கன்." என்று கூறியுள்ளார். இந்தக் கருத்து தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement