தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து பல தரப்பில் பல்வேறு கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததிலிருந்து, அவரை பற்றிய விமர்சனங்கள், ஆதரவுகள் என பல்வேறு தளங்களில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, ஜேம்ஸ் வசந்தனின் சமீபத்திய கருத்து ரசிகர்களை மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
ஜேம்ஸ் வசந்தன் அதன்போது, “பல கோடிகளை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வருவதை நான் வியந்து பார்த்தேன். ஆனால் அவர் வாய் திறந்து பேசியதும் தான் அவர் அரசியலுக்கு லாய்க்கில்லை என்பதை புரிந்து கொண்டேன். அவரை ஆபத்தானவராக பார்க்கிறேன். வலிமையற்று எந்த நோக்கமும் இல்லாமல் இருக்கிறார்.” எனக் கூறியுள்ளார்.

இந்த கூற்றுகள் சமூக வலைத்தளங்களில் பெரிய சர்ச்சையைத் தூண்டியுள்ளன. அத்துடன், ஜேம்ஸ் வசந்தனின் கருத்துக்கு விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!