பராசக்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் தனது 26-வது படத்திற்கு தயாராகி வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறுவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தில் விஜயகாந்த் மகன் படத்தில் நடித்த பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக இணையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ‘காந்தா’ திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், இந்த புதிய படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து உள்ளது.
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், இந்தி படங்களான ‘யாரியான் 2’ (2023), ‘சந்து ஜாம்பியன்’ (2024) போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கு படமான ‘மிஸ்டர் பச்சான்’ மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘கிங்டம்’ மற்றும் ராம் பொதினேனியுடன் ‘ஆந்திரா கிங் தாலுகா’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
எனவே ‘எஸ்கே26’ படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைவாரா? இல்லையா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
Listen News!