• May 28 2026

கெனிஷாவுடன் பிரிவு வெறும் கண்துடைப்பா.? மக்கள் கிட்ட பரிதாபம் தேடும் ரவி.! வெளியான உண்மை

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ரவி மோகன் குறித்த பல்வேறு சர்ச்சைகள் நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகின்றன. இவர் தனது இல்லற வாழ்க்கை தொடர்பாக மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

இதற்கிடையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது குடும்ப வாழ்க்கை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ரவி மோகனின் படம் தயாரிப்பு மற்றும் தயாரிப்பாளர் தரப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், இது தொடர்பில் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம், நீதிமன்ற வழக்கு மற்றும் கெனிஷா பற்றியும் தெரிவித்துள்ளார்.


அதன்படி அவர் பாடகி கெனிஷா கூறுகையில், 

கெனிஷா இவங்க இருக்காங்க இல்ல… இவங்கதான் இப்போ எல்லாம் இந்த விவகாரத்துல அதிகமா பேசப்படுறாங்க. அவங்க சொல்லுற மாதிரி எல்லாம் நான் நம்பல. ஒரு பக்கம் சைபர் புல்லியிங் நடக்குதுன்னு சொல்றாங்க, அதுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு போறேன்னு சொல்றாங்க. ஆனா இது எல்லாம் ஒரு எமோஷன் உருவாக்குற மாதிரி தான் இருக்கு. 

இவங்கதான் எல்லாத்துக்கும் காரணம்னு நான் நேரா சொல்லல… ஆனா இவங்க தாக்கம் இருக்குன்னு பேசுறாங்க. இப்படி ஒருத்தர் வாழ்க்கைக்குள்ள இன்னொருத்தர் வர்றது சரியா?

இது எல்லாம் சும்மா சாதாரண விஷயம் இல்ல. இதுக்குள்ள நிறைய நடிப்பு மாதிரி விஷயங்களும் இருக்கு. மக்கள் கிட்ட பரிதாபம் ஏற்படுத்துற மாதிரி தான் சில விஷயங்கள் போகுது.

அத்தோட, இது எல்லாம் கேமரா முன்னாடி பேச வேண்டிய விஷயமா? குடும்ப பிரச்சனையை இப்படி பத்திரிகையில கொண்டு வந்து பேசுறது சரியா?

ரவி சொல்ற பல விஷயங்கள் முரண்பாடா இருக்கு. வாடகை வீட்டுல இருக்கேன் சொல்றார், அதே நேரத்துல சொத்து விவகாரம் வேற மாதிரி இருக்கு. யாருக்கு உண்மை தெரியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.


தயாரிப்பு நிறுவனம் தொடர்பாக அவர் கூறுகையில்,

மாமியார் தயாரிப்பாளர் இல்லைன்னு சொல்றது சரியல்ல. அவங்க ஏற்கனவே சீரியல், படம் எல்லாம் எடுத்த அனுபவம் உள்ளவங்க. இதை மறைக்க முடியாது.

மேலும், ஒரு படம் ஓடலன்னா அடுத்தவங்க மேல பழி போடுறது சரியல்ல. நீங்க ஒப்புக்கிட்டு நடிச்ச படத்துக்கு பிறகு இப்படி பேசுறது நியாயமா? என பட வாய்ப்புகள், தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சம்பள விவகாரம் குறித்த குற்றச்சாட்டுகளையும் அவர் விமர்சித்தார்.

இறுதியில் பிள்ளைகள் படிப்பு, குடும்ப வாழ்க்கை எல்லாம் பாதிக்கப்படுற அளவுக்கு இந்த விவகாரம் போயிருக்கு. இதெல்லாம் சீரியஸா யோசிக்க வேண்டிய விஷயம் என்றும் குடும்ப விவகாரம் பற்றியும் அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement