• Jun 13 2026

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அப்போ இதைக் கேளுங்க.! நடிகர் சமுத்திரக்கனியின் ஸ்பீச் வைரல்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பாலும் சமூகப் பார்வையுடனான கருத்துக்களாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகர் சமுத்திரக்கனி தற்போது பகிர்ந்துள்ள சிந்தனைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


அவர் தனது பேச்சில் பணம் மற்றும் மனநிம்மதி குறித்து மிக எளிமையாகவும் ஆழமாகவும் கருத்து தெரிவித்துள்ளார். “பணம் நம் தேவைக்கு இருந்தால் போதும்; அப்போது தான் நிம்மதியாக தூங்க முடியும்” என்று அவர் கூறியுள்ளார். இதை விளக்குவதற்காக, கையில் 1,000 ரூபாய் இருந்தால் நிம்மதியாக உறங்கலாம், ஆனால் 5 லட்சம் ரூபாய் இருந்தால் அது பாதுகாப்பாக இருக்கிறதா என்று தொடர்ந்து கவலைப்படுவோம் என எடுத்துக்காட்டினார்.

இந்த உதாரணம் மூலம் அதிக பணம் இருந்தாலே சந்தோஷம் கிடைக்கும் என்பது தவறான எண்ணம் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் ஒரே மாதிரியான வாழ்க்கையை தான் வாழ்கிறேன்.” என்ற அவரது கருத்து, வாழ்க்கையை எளிமையாக பார்க்கும் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

சமுத்திரக்கனி வலியுறுத்திய முக்கியமான செய்தி, “மனநிம்மதியே மிக முக்கியம்” என்பது தான். அவரது இந்த கருத்துக்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, வாழ்க்கையின் உண்மைகளை நினைவூட்டும் வகையில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement