• May 15 2026

முதல் தேர்தலிலேயே கோடிக்கணக்கான வாக்குகளை அள்ளிய விஜய்.. வெளியான முழுவாக்கு விபரம்.!

shali / 1 week ago

Advertisement

Listen News!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் விஜய்க்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. திரையுலக நடிகர்கள், பிரபலங்கள், அரசியல் விமர்சகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த தேர்தல், தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தனது முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே தனித்துப் போட்டியிட்ட இந்த கட்சி, தற்போது எண்ணப்பட்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் 2.88 கோடி வாக்குகளில் 1 கோடி வாக்குகளை தவெக பெற்றதாக கூறப்படுகிறது. இது புதிய அரசியல் கட்சியாக இருக்கும் தவெகவுக்கு பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.


இந்த வாக்கு எண்ணிக்கை, மக்களிடையே விஜய்க்கு கிடைத்திருக்கும் ஆதரவை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு அதிக ஆதரவு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

இதனை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பல இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement