• Jun 14 2026

விஜய்யின் ரிசல்ட்டைப் பார்த்து உணர்ச்சியின் எல்லைக்கே சென்ற நடிகர் ஜீவா!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை நோக்கி முன்னேறி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெற்றி, புதிய அரசியல் கட்சியாக உருவான தவெகவுக்கு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், நடிகர் ஜீவா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் மிகுந்த உற்சாகத்துடன் விசில் அடித்து விஜய்யின் வெற்றியை கொண்டாடி உள்ளார். 

மேலும், அந்த தருணத்தில் அவர் ஆனந்தக் கண்ணீர் சிந்தும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இது அவரது உணர்ச்சிபூர்வமான ஆதரவை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் அதை பகிர்ந்து, விஜய்க்கான ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். திரையுலக நட்சத்திரங்களிடமிருந்து இவ்வாறு ஆதரவு கிடைப்பது, விஜய்யின் அரசியல் பயணத்திற்கு மேலும் உற்சாகத்தை அளிப்பதாக பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement