• May 28 2026

மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பிரதீப்… நடிப்பிலிருந்து விலகிறாரா? ஷாக்கில் ரசிகர்கள்.!

shali / 1 day ago

Advertisement

Listen News!

இளம் இயக்குநர் மற்றும் நடிகராக தமிழ் திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் பிரதீப் ரங்கநாதன் தற்போது ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மற்றும் ‘டியூட்’ போன்ற படங்கள் தொடர்ந்து ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து அவருக்கு வணிக ரீதியான பெரிய வெற்றியை வழங்கியுள்ளன. சமீபத்தில் அவர் நடித்த ‘எல்ஐகே’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அவரின் மார்க்கெட் மதிப்பு குறையவில்லை.


இந்த சூழலில், பிரதீப் ரங்கநாதன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் என்பது திரையுலகில் முக்கியமான செய்தியாக பார்க்கப்படுகிறது. இதன் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும், படக்குழுவின் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

மேலும், இந்த புதிய படத்தில் நாயகியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் நடிப்பு திறமை மற்றும் இளமைத் தோற்றம் காரணமாக இந்த தேர்வு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் ஒரே நேரத்தில் செயல்படுவது அவரது கரியரில் புதிய பரிமாணமாக பார்க்கப்படுகிறது. இந்த படம் அவரின் புதிய தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு வலுவான தொடக்கமாக இருக்கும் என திரை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Advertisement

Advertisement