• May 28 2026

தேர்தலில் காணாமல் போன லோகேஷ்… இன்று விஜய்யை சந்தித்ததன் பின்னணி என்ன தெரியுமா?

shali / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் நடித்த Leo திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஒரு விஷயம் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அப்போது, “நீங்கள் முதலமைச்சராக மாறினால் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு என்ன துறை கொடுப்பீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிரித்தபடி “போதைப்பொருள் ஒழிப்புத்துறை” என விஜய் பதிலளித்திருந்தார். அந்த பேச்சு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.


இதற்கிடையில், சமீபத்தில் நடந்த தேர்தலில் விஜய்க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் வாக்களிக்க வரவில்லை என்ற விவாதமும் சமூக வலைத்தளங்களில் கிளம்பியது. இதனால் இருவருக்கும் இடையே ஏதேனும் மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டதா என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டன. 

ஆனால், அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

மேலும், விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக தளபதி ரசிகர்கள், “முதலமைச்சர் விஜய்யை வைத்து லியோ 2 எடுக்கணும்..” என கமெண்ட்ஸில் கோரிக்கை வைத்து வருகின்றனர். அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று விஜய் ஏற்கனவே தெரிவித்திருந்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மட்டும் இன்னும் குறையவில்லை.

Advertisement

Advertisement