• Apr 17 2026

'மாடலிங்' எனும் போர்வையில் கவர்ச்சி காட்டும் பிரபலங்களுக்கு மத்தியில் சிறந்து திகழும் ஈழத்து ஜனனி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த பிக் பாஸ் ஜனனி , தற்போது வரையில் சிறப்பாக பயணித்து வருகிறார். எப்போது தனது புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிடும் இவர் தற்போது தனது அழகிய படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த இலங்கை பெண் ஜனனி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். 

தனது முதல் படத்திலே நல்ல வெற்றி கண்ட பிக் பாஸ் ஜனனி தற்போது லியோ ஜனனி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.


இதை தொடர்ந்து போட்டோஷூட், ரீல்ஸ் என ரொம்ப பிசியா இருக்கும் ஜனனி, தற்போது டுவிட்டர் பக்கத்தில் தனது அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

இதேவேளை, தற்போதைய காலத்தில் கொஞ்சம் சினிமாவில் பிரபலம் ஆனதும் கவர்ச்சி உடையில் போட்டோஸ் வெளியிடும் நடிகைகளுக்கு மத்தியில், ஈழத்து பெண்ணான ஜனனி இது வரையில் கலாச்சார உடைகளை அணிந்து வருவது பலராலும் வரவேற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ....


Advertisement

Advertisement