• Apr 26 2026

சேத்தனை வீட்டுக்கு வெளிய விடாதீங்க! இருக்குற கடுப்புக்கு போட்டுத்தள்ளிருவாங்க ஜாக்கிரதை! மேடையில் கொந்தளிக்கும் சூரி

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் ஒரு காலத்தில் முன்னணி காமெடியனாக இருந்து வந்தவர் நடிகர் சூரி ஆவார். வெண்ணிலா கபடிக்குழு என்ற திரைப்படத்தில் வரும் போராட்டா காமெடி மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த வருத்தப்படாத வாலிப சங்கம் , ரஜனி முருகன் போன்ற கிராமத்து திரைப்படங்கள் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.


இவ்வாறு முன்னணி காமெடியனாக வலம் வந்த இவரது நகைச்சுவைகள் கிரிஞ் ஆக உள்ளது என பலர் கலாய்த்து வந்த நிலையில் சமீபதில் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகின்றார். வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விடுதலை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.இதில் கொடூரமான போலீஸ் போன்ற கதாபாத்திரத்தில் வரும் நடிகர் சேத்தன் பற்றி சில வார்த்தைகள் சூரி அவர்கள் குறி உள்ளார்.


விடுதலை படத்திற்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய சூரி "சேத்தனை படம் வெளியாகி  ஒரு வாரத்திற்கு வெளியில் விடாதீர்கள் அனைவரும் இருக்கும் கோவத்திற்கு போட்டு தள்ளி விடுவார்கள்" என கூறியுள்ளார். அதாவது சேத்தன் குறித்த படத்தில் கொடூரமான போலீஸ் ஆக அருமையாக நடித்துள்ளார் என்பதற்ககாவே நகைச்சுவையாக இப்படி க்ரியுள்ளார் சூரி. 

Advertisement

Advertisement