இசையமைப்பாளரும் நடிகருமான G. V. பிரகாஷ் குமார் சமீபத்தில் கூறிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் ஈர்த்து வருகின்றன. அவர் அளித்த பேட்டியில், “மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலான சில விளம்பரங்களில் அதிக தொகை வழங்கப்பட்டாலும் நான் நடிக்க மறுத்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. பொதுமக்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது தவறான தகவல்களை பரப்பக்கூடிய பொருட்களை பிரபலங்கள் விளம்பரம் செய்வது குறித்து அவர் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜி.வி. பிரகாஷின் இந்த நிலைப்பாடு, அவரின் சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பலரும், “பணம் மட்டுமே முக்கியமல்ல; மக்களின் நலனும் முக்கியம்” என்ற அவரது அணுகுமுறையை வரவேற்றுள்ளனர்.
Listen News!