• May 15 2026

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு தியேட்டரில் சொதப்பலா? வசூல் நிலவரம் இதோ.!

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

அண்டனி புக்குவா இயக்கத்தில், பாப் இசையின் அரசனாக போற்றப்படும் மைக்கேல் ஜாக்சன் அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைக்கேல்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியானது. இதில் மைக்கேல் ஜாக்சனின் மருமகனான ஜாஃபர் ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


படம் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த பயோபிக், தற்போது வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை உலகளவில் சுமார் 38 மில்லியன் டாலர் வரை இப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவிலும் இப்படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வெளியீட்டின் முதல் சில நாட்களிலேயே சுமார் 5.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமர்சன ரீதியாகப் பார்க்கும்போது, இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. சிலர் படத்தின் காட்சிப்படுத்தல் மற்றும் இசையை பாராட்டியுள்ள நிலையில், சிலர் திரைக்கதையில் மேலும் ஆழம் இருக்க வேண்டியதாக கருத்து தெரிவித்துள்ளனர். 


Advertisement

Advertisement