• Apr 24 2026

பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை சுக்குநூறாக்கிய ‘துரந்தர் 2’.. இவ்வளவு நாள் வசூல் இத்தனை கோடியா?

shali / 1 hour ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான ‘Dhurandhar The Revenge’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம், பான் இந்திய அளவில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ரன்வீர் சிங், ஆர். மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி, டேனிஷ் பாண்டோர் மற்றும் சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


முதல்பாகம் பெற்ற மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து, இந்த இரண்டாம் பாகம் நேரடியாக பல மொழிகளில் வெளியிடப்பட்டதால், இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிரடி காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் நட்சத்திர பட்டாளம் ஆகியவை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

வசூல் விவரங்களும் அதையே உறுதிப்படுத்துகின்றன. வெளியான 5 வாரங்களிலேயே இந்த படம் ரூ.1,783 கோடி வசூலை எட்டியுள்ளது. இதில் வெளிநாடுகளில் மட்டும் ரூ.423 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது சமீப காலத்தில் வெளியான படங்களில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்த மாபெரும் வெற்றியின் மூலம், ‘துரந்தர் 2’ இந்திய சினிமாவின் பான் இந்திய மார்க்கெட்டில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை பதித்துள்ளது.


Advertisement

Advertisement