• Apr 27 2026

'என்ஜாய் எஞ்சாமி' புகழ் தீயின் அடுத்த அதிரடி.. வெளியான புதிய ஆல்பம் வேறலெவல் ஹிட்.!

shali / 2 days ago

Advertisement

Listen News!

இலங்கையைச் சேர்ந்தாலும், ஆழமான தமிழர் பண்பாட்டு வேர்களை தன்னுள் தாங்கி உலக இசை அரங்கில் தனக்கென இடம் பிடித்திருப்பவர் தீ. குறிப்பாக என்ஜாய் என்ஜாமி பாடலின் மூலம் அவர் பெற்ற வெற்றி, இந்திய சுயாதீன இசைக்கு ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியது. இந்தப் பாடல் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, தீயை சர்வதேச இசை ரசிகர்களிடமும் பிரபலமாக்கியது.


இந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘வரி வரி’ எனும் புதிய இசை ஆல்ப வீடியோவை கொழும்பில் தீ வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல், தனித்துவமான இசை வடிவங்களுக்காக பெயர் பெற்ற சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ளது. பாடலின் வரிகளை கவிஞர் விவேக் எழுதியுள்ளார். இசை, வரிகள் மற்றும் குரல் ஆகிய மூன்றும் இணைந்து, ‘வரி வரி’ பாடலை ஒரு புதிய அனுபவமாக மாற்றியுள்ளது.

இந்தப் பாடல், நவீன இசையையும் பாரம்பரிய உணர்வுகளையும் ஒருங்கிணைக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தீயின் குரலில் வெளிப்படும் உணர்ச்சி மற்றும் ஆழம், ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. ‘வரி வரி’ பாடல், அவரின் இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement