• May 15 2026

இத்தனை ஆண்டு கால ஒற்றுமையை குலைத்த காந்திமதி.. பழனியிடம் உண்மையை உடைத்த கதிர்

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பழனி பாண்டியன் வீட்ட போய் நான் அப்பாவாகப் போகிறேன் எனச் சொல்லுறார். அதைக் கேட்டு அங்கிருந்த எல்லாரும் சந்தோசபப்டுகிறார்கள். பின் காந்திமதி இத்தனை நாள் வேண்டுதல் இண்டைக்கு பழிச்சிடுச்சு என்று சொல்லி அழுகிறார்.

மறுபக்கம் செந்திலும் பழனிக்கு போன் எடுத்து ரொம்ப சந்தோசமா இருக்கு என்று சொல்லுறார். அதனைத் தொடர்ந்து பழனி கதிரைப் பார்த்து சரவணனுக்கும் குழந்தை பிறக்கப் போகுது அப்படியே நீயும் செந்திலும் குழந்தையை பெத்துக்கிட்டால் நம்ம அடுத்த தலைமுறையும் நம்மள மாதிரி ஒற்றுமையா வாழ ஆரம்பிச்சிடும் என்கிறார்.


அதுக்கு கதிர் குழந்தை எல்லாம் பெரிய பொறுப்பு அதையெல்லாம் நான் இப்போதைக்கு ஜோசிக்கவே இல்ல என்கிறார். பின் கதிர் பழனி கிட்ட அம்மாச்சி இங்க இருக்கிறது எனக்கு சரியாபடல, மேலும், இத்தனை வருசத்துல அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்ததில்ல இந்த சண்டை அம்மாச்சி வந்ததுக்கு அப்புறம் தான் நடந்திச்சு என்கிறார்.

அதைக் கேட்ட பழனி நான் முயற்சி பண்ணிப் பார்க்கிறேன் என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து பழனி காந்திமதியை வீட்டிற்கு வரச்சொல்லுறார். அதுக்கு காந்திமதி என்னை வீட்டை விட்டு அனுப்பினவங்க வந்து கூப்பிட்டால் நான் வாறன் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement