• Apr 24 2026

அந்த ரோல் பண்ண ரொம்ப கஷ்டப்பட்டேன்!- 'மாரி' கதாபாத்திரம் குறித்து மனம் திறந்த தனுஷ்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தற்போது தனது புதிய திரைப்படமான ‘கர’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளார். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், வரும் ஏப்ரல் 30, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் ராஜா, தனுஷிடம் “நீங்கள் நடித்த கதாபாத்திரங்களில் மிகவும் சவாலானது எது?” எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த தனுஷ், ‘மாரி’ படத்தில் நடித்த மாரி கதாபாத்திரமே தன்னுடைய மிகவும் சவாலான வேடம் என தெரிவித்துள்ளார்.


அவர் இதுகுறித்து கூறியதாவது, “குழந்தைகளின் பலூனை சிகரெட்டை வைத்து வெடிக்கச் செய்யும் அளவுக்கு ஒரு மோசமான ரௌடி. ஆனால் அதே நேரத்தில், அந்தக் கதாபாத்திரம் ரசிகர்களால் நேசிக்கப்பட வேண்டும். அது கத்தி மேல் நடப்பதற்கு சமமான ஒரு சவால். அந்த ரோலுக்கு நிறைய உழைப்பு, மெனக்கெடல் தேவைப்பட்டது” என தெரிவித்தார்.

தனுஷின் இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு எதிர்மறை குணம் கொண்ட கதாபாத்திரத்தையும், ரசிகர்கள் விரும்பும் வகையில் உயிர்ப்பித்து காட்டும் அவரது திறமைக்கு ரசிகர்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இதனால், ‘கர’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement