தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் தனது செயல்கள், சமூக ஆர்வம் மற்றும் நடிப்பால் ரசிகர்களிடம் நீண்டகாலமாக பரவலான அன்பைப் பெற்றுள்ளார். சமீபத்தில் அவர் நடிகை சாய் தன்ஷிகாவுடன் நிச்சயதார்த்தத்தில் ஈடுபட்ட செய்தி, ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலகத்திலும் பெரும் கவனத்தை பெற்றது.
இந்த காதல் இணைப்பு பற்றிய தகவல் பலருக்கும் எதிர்பாராத ஒன்றாக இருந்தாலும், இருவரும் குடும்பத்தினரின் சம்மதத்துடனும் ஒருமைப்பாட்டுடனும் முடிவெடுத்து, ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கத்தை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டின் தீபாவளி (அக்டோபர் 20), இந்தப் புதுத் தம்பதிக்கு ஒரு நினைவில் நிலைக்கும் நாளாக அமைந்துள்ளது. நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, அவர்கள் இருவரும் முதன் முதலில் தீபாவளி பண்டிகையை இணைந்து கொண்டாடியுள்ளனர்.
ஆனால் இந்த கொண்டாட்டம் ஒரு தனிநபர் மகிழ்ச்சியாக இல்லாமல், சமூகத்தில் உள்ள ஏழை எளியவர்களுடன் அன்பை பகிர்ந்துகொண்ட நிகழ்வாக மாறியுள்ளது.
தீபாவளி அன்று, விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவரும் சென்னையில் உள்ள ஒரு குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் சிறப்பான ஏற்பாடு ஒன்றை செய்தனர்.
அந்த ஆச்சிரமத்தில் வசிக்கும் ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுடன், இருவரும் நேரத்தை கழித்து, அவர்கள் உடன் தீபாவளியை கொண்டாடினர்.
Listen News!