• Jul 18 2025

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது நடிகர் கிருஷ்ணா மீது பொலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தலைமறைவாக இருந்த இவர் தற்பொழுது பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. நடிகர் கிருஷ்ணா, பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர். 

இவர் தனது இயல்பான நடிப்புத் திறமையால் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பெற்றிருந்த நிலையில், இப்போது அவர் மீது எழுந்துள்ள போதைப்பொருள் வழக்கு தமிழ் திரை உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


பொலீஸார் தற்போது ஆராய்ந்து வரும் முக்கிய அம்சங்களில் ஒன்று, “Code word” என்ற சொல்லின் பின்னணியில் உள்ள அர்த்தம் தான். நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் கடந்த 2020ம் ஆண்டு முதல் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகள் தொடர்பாக தற்பொழுது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

அத்துடன், நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு சிலரிடம் "Code word"-ல் நடிகர் கிருஷ்ணா தகவல்கள் பரிமாற்றம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலீஸார் அந்த Code word"-க்கான அர்த்தம் என்ன?, போதைப் பொருள் தொடர்புடையதா? என விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


Advertisement

Advertisement