• Aug 28 2025

திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த கிங்காங்கிற்கு அடித்த ஜாக்பாட்.! என்ன தெரியுமா.?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலந்த நடிப்பால் மக்கள் மனதில் முத்திரையை பதித்தவர் நடிகர் கிங்காங். பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் விறுவிறுப்பான பங்களிப்பை அளித்துள்ள இவர், தற்போது மகிழ்ச்சியான ஒரு குடும்ப நிகழ்வை இயக்குநர் டி. ராஜேந்தர் அவர்களுடன் பகிர்ந்துள்ளார்.


மகள் கீர்த்தனாவின் திருமண பத்திரிகையை ராஜேந்தருக்கு நேரில் அளிக்க நடிகர் கிங்காங் சென்றுள்ளார். அந்த சந்திப்பு, ஒரு திருமண அழைப்பாக இல்லாமல், திரைத்துறையில் புதிய அத்தியாயத்தையும் ஆரம்பித்திருக்கிறது.


அந்த சந்திப்பின் போது ராஜேந்தர் “நான் அடுத்து இயக்கப்போகும் படத்தில் கிங்காங் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க வைக்கப் போகிறேன்." என உறுதியாக கூறியுள்ளார். இந்த அறிவிப்பு, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூர்விக நகைச்சுவை கதாபாத்திரங்களை தொடர்ந்து ரசிகர்களின் மனதில் அழியாத இடம் பிடித்த கிங்காங், தற்போது திரும்ப வரவுள்ள செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.


Advertisement

Advertisement