தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவுடன் விவாகரத்து பெற்ற தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கை மீதான கவனம், ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசுபொருளாகவே இருக்கிறது. இருவரின் பிரிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, தொடர்ந்து தனுஷின் வாழ்க்கை குறித்து பல வதந்திகளும் பரவத் தொடங்கின.
இந்நிலையில் சமீபகாலமாக, தனுஷ் பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரை காதலிக்கிறாரென்ற வதந்தி, ஹிந்தி சினிமா வட்டாரங்களில் பரவியது. இது தமிழ் மற்றும் ஹிந்தி ஊடகங்களில் பெரும் விவாதத்திற்கும், ரசிகர்கள் மத்தியில் குழப்பத்திற்கும் காரணமாக அமைந்தது.
இந்த வதந்திகள் பரவியவுடன், இனி இது உண்மையா? என்ற எண்ணத்தில் ரசிகர்கள் வினாக்கள் எழுப்ப ஆரம்பித்தனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், மிருணாள் தாகூர் நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.
“தனுஷ் என் நல்ல நண்பர் மட்டுமே. இதை வித்தியாசமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சமீபத்தில் நாங்கள் நிகழ்வில் கலந்து கொண்டோம், அதற்காக எங்களை காதலர்கள் என்று சொல்லி வதந்தி பரப்புவது ஏற்றுக்கொள்ள முடியாது.”
“இந்த வதந்தியை நானும் பார்த்தேன். உண்மையிலேயே, அதை பார்த்தபோது எனக்கு சிரிப்பு தான் வந்தது!” என தெரிவித்துள்ளார் மிருணாள். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!