• Apr 27 2025

அஜித் இன்னும் குழந்தையாவே இருக்காரே..!! இணையத்தை தெறிக்கவிட்ட RACE பைக் வீடியோ இதோ..

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் விடாமுயற்சி திரைப்படம்  எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. குட் பேட் அக்லி ஏப்ரல் 10-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸிங் இல் தனது அணியுடன் களம் இறங்கி மூன்றாவது இடத்தை வெற்றி பெற்று இருந்தார் அஜித். இதனால் இவருக்கு ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தென்னிந்திய பிரபலங்கள் பலரும் நேரடியாகவே சென்று தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

அஜித் குமார் சினிமா துறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றாரோ அதைவிட கார், பைக் ரேசிங்கிலும் அதிக ஆர்வம் கொண்டவராக காணப்படுகின்றார். இதனாலையே சமீபத்தில் வழங்கிய பேட்டி ஒன்றில், ரேசிங் சீசன் நடைபெறும்  மாதங்களில் நான் இனி படங்களில் நடிக்க போவதில்லை என தெரிவித்திருந்தார்.


அதுமட்டும் இல்லாமல் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தனது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு அஜித் குமார் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அஜித்குமாரின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அதில் பைக் ரேசிங் செல்லுகின்றார். தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement