• Apr 02 2025

குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி! அதிர்ச்சி தரும் தகவல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

ஆரம்பத்தில் தள்ளு வண்டியில் காய்கறிகளை விற்று அதன் பின்பு சினிமாவில் முயற்சி செய்த இமான் அண்ணாச்சிக்கு சென்னை காதல் மற்றும் வேட்டைக்காரன் ஆகிய படங்கள் கை கொடுத்தன. 

சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் அடுத்த அடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன்படி பானா காத்தாடி, தெரு, கோ, பாகன், மிரட்டல், மரியான் என பல படங்களில் காமெடி ஆக்டராக நடித்தார். மேலும் சின்னத்திரையில் சொல்லுங்க அண்ணே சொல்லுங்கள் மற்றும் குட்டிஸ் குட்டிஸ் நிகழ்ச்சிகளில் இவருடைய அட்ராசிட்டியை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது. 


இவருக்கு எனவே மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உருவானது. தற்போது இமான் அண்ணாச்சி ஒரு படத்தில் நடிப்பதற்கு 20 முதல் 25 வரை சம்பளம் பெறுகின்றார். 

இந்த நிலையில், சென்னை - நெல்லை குறைவலைச் சாலையில் மாடுகள் குறுக்கே பாய்ந்து பல விபத்துக்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் இருந்து தனது குடும்பத்தினருடன் காரில் சொந்த ஊருக்கு சென்ற நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி விபத்தில் சிக்கியுள்ளார். இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

எனினும் அதிர்ஷ்டவசமாக இமான் அண்ணாச்சியும் அவருடைய குடும்பத்தினரும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பி உள்ளனர். இந்த தகவலை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த இமான் அண்ணாச்சி மாடுகளால் ஏற்படும் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்கும் மாறும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement