• Apr 03 2025

கெட்ட ஆத்மா மொத்தமா இந்த முகத்துல தான் தெரியுதா? கட்டிலுக்கு நடுவே மனோஜ் போட்ட கோடு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகினி கனவு கண்டு கதற மனோஜ் மேசைக்கு அடியில் ஒளிந்து கொண்டு விஜயாவுக்கு போன் பண்ணுகிறார். இதன்போது விஜயாவை ரூம்க்கு அழைக்க, அவர் வந்து ரோகிணியை பார்த்து பயப்படுகிறார்.

அதன்பின் என்ன நடந்தது என்று கேட்க, அவர் கனவு கண்டு பயந்ததாக சொல்ல, அவருக்கு விபூதி வைத்து விடுகிறார் விஜயா. அதன்பின் மனோஜ் பயத்தில் கீழே தூங்க வெளிக்கிட, ரோகிணி திட்டுகிறார். பிறகு மனோஜ் கட்டிலுக்கு நடுவில் விபூதியால் கோடு போட்டு தூங்குகிறார்.


இதையடுத்து ரவி,  ஜோகா கிளாஸ் போகலாமா என்று கேட்க, அதற்கு ஸ்ருதி எடக்கு முடக்காக பேசுகின்றார். ரவி கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் டக்கு முடக்காக பேச அவர் ஓடியே விடுகின்றார். இதை பார்த்த மீனா ஏன் இப்படி பண்றீங்க அவர் பாவம் என்று சொல்ல, நீங்களும் முத்துவுக்கு ட்ரை பண்ணி பாருங்க என்று சொல்கின்றார். அது போலவே முத்து வந்தவுடன் மீனாவும் டக்கு முடக்காக பேசுகின்றார்.


இதைத்தொடர்ந்து ரோகினியை பார்வதி வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றார்கள். அங்கு ரோகினிக்கு பேய் விரட்டுவதற்காக சாமியார் ஒருவரை அழைத்துள்ளார்கள். அங்கு வந்த சாமியார் விஜயாவை பார்த்தவுடன் அகங்காரம், தான்தான் என்ற ஆணவம் ஒட்டுமொத்த கெட்ட சக்தியும் உமது முகத்தில் தான் இருக்கிறது என்று சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement