• Feb 22 2025

இரண்டு நடிகைகளுடன் இரட்டை வேடத்தில் நடிகர் சிம்பு... புது திரைப்பட அப்டேட் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பத்து தல படத்திற்கு பின் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் STR 48. கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். வரலாற்று கதைக்களத்தை மையாக வைத்து உருவாகும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 


இப்படத்தில் அதிக CG வேலைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கான வேலைகளும் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த நிலையில், அதன்பின் வேறு எந்த ஒரு அப்டேட்டும் இப்படம் குறித்து வெளிவரவில்லை.


இந்நிலையில் தற்போது STR 48 படத்தின் கதாநாயகிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை வேடத்தில் சிம்பு நடிக்கவுள்ள STR 48 படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றும் ஏற்கனவே கூறப்பட்டது.


இதில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த தீபிகா படுகோன் மற்றும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்கள் என அப்டேட் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement