சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், மீனாவின் மண்டப ஆர்டரை தடுப்பதற்காகவே சிந்தாமணியுடன் விஜயா பிளான் போடுகிறார். அதன்படி தனக்கு கை முடியாமல் போய்விட்டது என்று மீனாவிடம் தொடர்ச்சியாக வேலை வாங்குகின்றார்.
இதன் போதும் போன் பண்ணிய முத்து வீட்டில் இருந்து கிளம்பி விட்டாயா? இங்கே எல்லாரும் வந்து விட்டார்கள் என்று சொல்ல, அத்தைக்கு உடம்பு முடியவில்லை.. அவரை விட்டு வர விருப்பமில்லை.. அதனால் தான் இங்கே இருந்து வீடியோ காலில் அனைத்தையும் சொல்லுவதாகவும் அதனை சரியாக செய்யுமாறு முத்துவுக்கு சொல்லுகிறார்.
அதன்படியே முத்துவும் சீதா மற்றும் அங்குள்ள பெண்களுடன் இணைந்து மீனா சொன்ன மாதிரியே டெக்ரேசன் பண்ணி முடிக்கின்றார்கள். இறுதியில் வீடியோ காலில் டெக்ரேஷனை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார் மீனா.
அதன் பின்பு விஜயாவுக்கு சுடுதண்ணி எடுத்துக்கொண்டு போகும் போது அங்கு விஜயாவுக்கு போன் பண்ணிய சிந்தாமணி, உங்கள நம்பி ஒன்றுமே செய்ய முடியாது.. உங்க மருமகள் உங்களுக்கு மேலாள தந்திரக்காரியாக இருக்கிறார். வீட்டில் இருந்து திருமண ஆடரை நன்றாக முடித்துவிட்டார் என்று சொல்லுகின்றார்.
இதை கேட்ட விஜயா அது எப்படி முடியும்.? நான் அவளிடம் தொடர்ச்சியாக வேலைக்கு மேல் வேலை வாங்கிக் கொண்டு இருக்கின்றேனே என்று சொல்ல, கிழிச்சிங்க என்று விஜயாவுக்கு திட்டிவிட்டு ஃபோனை வைக்கின்றார் சிந்தாமணி. இதனை வெளியில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கின்றார் மீனா.
இறுதியில் முத்து வீட்டிற்கு வந்து அனைத்தும் சிறப்பாக நடந்து முடிந்து விட்டதாக சொல்ல, மீனா வீட்டில் அத்தைக்கு உண்மையாகவே உடம்பு சரியில்லை என்று சொன்னது பொய்.. அவர் சிந்தாமணி உடன் சேர்ந்துதான் இந்த காரியத்தை செய்தார் என சொல்லுகின்றார் மீனா. இது உண்மையா என்று கேட்கவும் ஆமாம் என்று சொல்லுகின்றார். இதனை கேட்டு முத்து அதிர்ச்சி அடைகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!