• Feb 23 2025

'NEEK' தனுஷ் தயாரித்த லவ் ஸ்டோரி ஒர்க் அவுட் ஆகியதா? வெளியான முதல் விமர்சனம்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராக பாடல் ஆசிரியராக நடிகராகவும் வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக ராயன் திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை கடந்து வசூலில் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீசில் இணைந்தது.

இதை தொடர்ந்து இட்லி கடை மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற இரண்டு படங்களையும் தயாரித்து வருகின்றார் தனுஷ். மேலும் தெலுங்கு இயக்குனருடன் இணைந்து குபேரா படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ், தனுசுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தற்போது அவர் படத்தைப் பார்த்து சொன்ன கருத்து இணையத்தில் வைரலாகி உள்ளது.


அதன்படி அவர் கூறுகையில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை பார்த்தேன். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு வழக்கமான காதல் கதையை திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த வழக்கமான காதல் கதையில் தனுஷ் உருவாக்கியுள்ள உலகம் என்னை மிகவும் குதூகலப்படுத்தியது.

இந்த குதூகலமும் உற்சாகமும் படத்தை திரையில் பார்க்கும் அனைவருக்கும் கிடைக்கும் என நினைக்கின்றேன். வாழ்க்கையின் அதீத மகிழ்ச்சிகள் அனைத்தும் காதல் என்ற அப்பாவித்தனத்தில் தான் கிடைக்கின்றது என்று படம் பற்றிய விமர்சனத்தை தெரிவித்து தனது வாழ்த்துக்களையும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement